search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் வெற்றி"

    • மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ரூ. 12 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
    • சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி செயலாளர் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

    சிவகிரி:

    சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் கீர்த்தனா, சக்தி பார்கவி, சுமித்ரா, மாணவர் கார்த்திகேயன் ஆகிய 4 பேர் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ரூ. 12 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் இப்பள்ளியில் தமிழ்நாடு கிராமப்புற மாணவர்களின் திறமை தேடல் தேர்வில் ஹரணி தங்கம், ரவீணா ஆகிய 2 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளியின் செயலாளர் தங்கேஸ்வரன், சிவகிரி சேனைத்தலைவர் மகாசபை தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் கலைஞர் என்ற மூக்கையா, பொருளாளர் ஆறுமுகம், பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேலு, பள்ளியின் கல்விக்குழு, அறப்பணிக்குழு உறுப்பினர்கள், பெற்றோ ர்கள், பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • பரமக்குடி அப்துல் கலாம் பள்ளி மாணவர்கள் யோகாசன போட்டியில் வெற்றி பெற்றனர்.
    • சேர்மன் முகைதீன் முசாபர் அலி, முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோர் பாராட்டினர்.

    பரமக்குடி

    பரமக்குடி புதுநகரில் உள்ள அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்னவ்(கடல்) யோகா மையம் மூலம் நடத்தப்பட்ட மண்டல அளவிலான யோகாசனப் போட்டிகளில் பங்கேற்றனர்.

    இதில் அனைத்து மாணவர்களும் திறமையை வெளிப்படுத்தி 9 பேர் முதல் பரிசும், 30-க்கும் மேற்பட்டோர் 2-ம் பரிசும், 10-க்கும் மேற்பட்டோர் 3-வது பரிசும் பெற்றனர். பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கமலக்கண்ணன், மணிகண்டன் ஆகியோரையும், பரிசு பெற்ற மாணவர்களையும் பள்ளி சேர்மன் முகைதீன் முசாபர் அலி, முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோர் பாராட்டினர்.

    • குறுவட்ட விளையாட்டு போட்டியில் மேலூர் அல்அமீன் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
    • 14 வயது பிரிவில் கோ கோ, கைப்பந்து போட்டியில் முதலிடம் வென்றனர்.

    மேலூர்

    மேலூர் அல் அமீன் உருது, தமிழ் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மேலூர் வட்ட பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டியில் மாணவன் கிரித்திஸ் நந்தன் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். 14 வயது பிரிவில் உயரம் தாண்டுதலில் ராஜதுரை 2-வது இடம், 14 வயது பிரிவில் சுபாஷ் நீளம் தாண்டுதலில் 2-ம் இடம், 200 மீட்டர் போட்டியில் முகேஷ் 3-ம் இடம் பெற்றனர். 17 வயது பிரிவில் 1500 மீட்டர் ஓட்ட போட்டியில் அருண்குமார் 2-ம் இடம், உயரம் தாண்டுதலில் அமீர் காட்டுவா 2-ம் இடம், மும்முறை தாண்டுதலில் எழுச்சி தமிழன் 2-ம் இடம், உயரம் தாண்டுதலில் கனிஷ்கர் 3-ம் இடம், ஈட்டி எறிதலில் பரணி 3-ம் இடம், 17 வயது பெண்கள் கேரம் போட்டியில் அனீஸ் பாத்திமா, சோபனா 2-ம் பரிசு பெற்றனர்.14 வயது பிரிவில் கேரம் போட்டியில் ஆயிஷா முதல் பரிசு பெற்றார். 17 வயது பிரிவில் கோ கோ போட்டியில் முதலிடம், 14 வயது பிரிவில் கைப்பந்து போட்டியில் முதலிடம், 14 வயது பிரிவில் கைப்பந்து போட்டியில் முதலிடம் வென்றனர்.போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவர்கள் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்களை முன்னாள் நகராட்சி சேர்மனும், பள்ளியின் தாளாளருமான எம்.ஓ.சாகுல் ஹமீது, தலைவர் காதர் மைதீன், பொருளாளர் ஜாகிர் உசேன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜபார், ஷாஜகான், ராஜா முகமது, காஜா மைதீன், ராஜா முகமது, சித்திக், பிலால், தலைமையாசிரியர் சலீம், உதவி தலைமை ஆசிரியர் அப்துல் ரஹ்மான், உடற்கல்வி ஆசிரியர் புகாரி ஆகியோர் பாராட்டினர்.

    • ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தியில் ஊராட்சி மன்றம் சார்பாக 50 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இலவச கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தேயில் பங்கேற்று 10 பேர் முதல்பரிசினையும் 5 பேர் இராண்டாம் பரிசுகளையும் பெற்று சாதனை படைத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தியில் ஊராட்சி மன்றம் சார்பாக 50 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இலவச கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தேயில் பங்கேற்று 10 பேர் முதல்பரிசினையும் 5 பேர் இராண்டாம் பரிசுகளையும் பெற்று சாதனை படைத்தனர்.

    வெற்றிபெற்று ஊர் திரும்பிய மாணவ-மாண விகளை ஆயக்காரன்புலம் 2 ஊராட்சி மன்ற தலைவர் ராமையன், ஆயக்காரன்புலம் நான்காம் சேத்திஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசிமற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பெற்றோர்கள், கிராம மக்கள் சால்வை அணிவித்து மாலை அணிவித்து வரவேற்பு அளித்து பாராட்டினர். 

    ×